ஜப்பானில் மீண்டும் சுனாமியா? அரியவகை மீன் சிக்கியதால் அதிர்ச்சி
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் அரியவகை மீன்கள் மீனவரின் வலையில் சிக்கிய சில நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஜப்பானில் அதேவகை மீன்கள் மீனவரின் வலையில் சிக்கியுள்ளதால் மீண்டும் சுனாமி வருமோ என்ற பயத்தில் ஜப்பான் பொதுமக்கள் உள்ளனர்.
ஜப்பானில் மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இதே போன்று சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று ஜப்பான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, அரியவகை மீன் பிடிபடுவதற்கும் நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றிக்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை என்றும், அதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரமும் இல்லை என்றும் பொதுமக்கள் இதன் காரணமாக அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.