ஜம்முகாஷ்மீர் பேருந்து நிலைய வெடிகுண்டு: ஒருவர் கைது!
புல்வாமா தாக்குதலை அடுத்து நேற்று ஜம்மு-காஷ்மீர் பேருந்து நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நேற்று ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உத்தராகண்டைச் சேர்ந்த ஷாரிக் என்ற 17 வயது சிறுவன் மட்டும் இந்த தாக்குதால் உயிரிழந்தார்\
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் குண்டுவெடிப்பின்போது அங்கிருந்த மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் யாசிர் பாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது