ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா – மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் முதல்வர் பதவி விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பயங்கரவாதிகள் விவகாரத்தில் பா.ஜனதா அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் தொடங்குகிறது என அறிவித்தது. இவ்விவகாரத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் அவர்கள் விளக்கமளித்தபோது, ‘மக்கள் ஜனநாயக கட்சி அதனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜம்மு மற்றும் லாடக் பகுதியில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் எங்களுடைய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொள்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை தொடரும். நாங்கள் மக்களுடைய தீர்ப்புக்கு மதிப்பளிகிக்றோம். நாங்கள் அப்போது ஆட்சியை அமைக்கவில்லை என்றாலும் கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கும். மக்களுடைய தீர்ப்புக்காகதான் நாங்கள் கூட்டணியை வைத்தோம் என கூறிஉள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராபி அகமது மிர் பேசுகையில், “பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியை கொண்டு செல்லவே விரும்பினோம். ஆனால் விரிசல் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் முடிவு இப்படியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

Leave a Reply