ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கலைப்புக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்ததற்கு எதிரான மனுவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் தள்ளுபடி செய்தது. இதனால் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முஃப்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க முயன்ற நிலையில், கடந்த மாதம் மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்தார்.
கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது