ஜவுளி கடையில் பணம் பெற்றவர் சமூக ஆர்வலரா? முதல்வர் கேள்வி
சென்னையில் இருந்து சேலம் வரை அமையவுள்ள 8வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து, ‘8வழி சாலைக்கு எதிராக நடிகர் மன்சூர் அலி கான், பியுஷ் மானுஷ், மாணவி வளர்மதி மற்றும் வயதான பெண்மணி ஆகியோர் கைது செய்யப்பட்டது தவறு என கூறியபோது அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, ‘8 வழி சாலை அமைத்தால் 8 பேரை கொல்லுவேன் என நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்தார். அதனால் கைது செய்யப்பட்டார். அதேபோல் ஜவுளி கடையில் பணம் பெற்ற பியூஷ் மனுஷ் )எப்படி சமூக ஆர்வலராக இருக்க முடியும்? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் சேலத்தில் பிரபல ஜவுளி நிறுவனம் தனது புதிய கிளையை தொடங்கியபோது கடைக்கு எதிரே இருந்த மரத்தை வெட்டியதாக அந்த கடை நிர்வாகத்தினர்களை பயமுறுத்தி பியூஷ் மானுஷ் பணம் பெற்றதாக கூறப்பட்டது.