ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: திடீர் திருப்பம் ஏன்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு டிசம்பர் 4ஆம் தேதி அதாவது நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மனுதாக்கல் செய்துள்ளது இந்த வழக்கு அவசர வழக்காக இன்று மதியம் 1 மணிக்கு விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது, இந்த போராட்டத்தை டிசம்பர் 10 வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் பகல் 1.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், கோர்ட் அறிவுறுத்தலை ஏற்று டிசம்பர் 10 வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஊதிய விவகாரம் தொடர்பாக கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.