ஜிஎஸ்டியால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை உயரும்

ஜிஎஸ்டியால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை உயரும்

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தால் ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை அதிகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும் புதிதாக கட்ட ஆரம்பிக்கப்போகும் வீடுகளின் விலை குறையும் என்றும் தெரிய வந்திருக்கிறது.

தற்போது கட்டுமானத்தில் உள்ள திட்டங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு இருந்ததை விட 6.5% அதிகரித்துள்ளது. கட்டப் பட்டுக்கொண்டிருக்கும் வீடு களுக்கு செலுத்திய வரியில் இருந்து திரும்ப பெரும் வாய்ப்பு இருப்பதால் இந்த வீடுகளின் விலை குறையும். ஆனால் இந்த வாய்ப்பு ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளுக்கு இல்லை என்பதால் இந்த வீடுகளின் விலை அதிகரிக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஒட்டுமொத்த வரி அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இதை அமல்படுத்திவதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும்’’ என்று நைட் பிராங் இந்திய தலைவர் சிஷிர் பய்ஜால் தெரிவித்துள்ளார்.

“குறைந்த விலை வீடுகளுக்கு வரி ஏதும் இல்லை மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் 70 சதவீத ரியல் எஸ்டேட் சந்தை அதிக மற்றும் நடுத்தர விலை வீடுகளாக உள்ளன. இதனால் சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம்’’ என்று ரிக்ஸ் குளோபல் நிறுவனத்தைச் சேர்ந்த சச்சின் சந்திர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply