ஜிஎஸ்டி என்றால் என்ன?

ஜிஎஸ்டி என்றால் என்ன?

gst billநாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள்:

இந்தியாவின் முக்கிய வரி சீர்த்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவதில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில் தற்போது பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஏற்ப இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் பல நிறுவனங்கள் உள்ளன. மேலும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சட்ட மசோதா குறித்த சந்தேகங்கள் நிறைய எழுந்துள்ளன. | விரிவாக வாசிக்க > ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள் |

சாஃப்ட்வேர் தயார்…

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்வேர் தயாராக உள்ளது. இதை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியுள்ளது. | விரிவாக வாசிக்க > ஜிஎஸ்டி அமல்படுத்த சாஃப்ட்வேர் தயார்: இன்போசிஸ் உருவாக்கியுள்ளது |

மாநிலங்களவையில் நிறைவேறியது..

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. எனினும், இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்கெடுப்பை புறக் கணித்தது. இதுகுறித்த விரிவான செய்திக்கு > காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: வாக்கெடுப்பை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

Leave a Reply