ஜிஎஸ்டி-யால் ஜிடிபி 0.40 சதவீதம் அதிகரிக்கும்: ஹெச்எஸ்பிசி அறிக்கை

ஜிஎஸ்டி-யால் ஜிடிபி 0.40 சதவீதம் அதிகரிக்கும்: ஹெச்எஸ்பிசி அறிக்கை

ஜிஎஸ்டி சட்டத்தினால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்கும் என ஹெச்எஸ்பிசி அறிக்கை கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.40 சதவீதம் அதிகரிக்கும். இதற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்பை விட இந்த புள்ளிகள் குறைவானதாகும். பல்வேறு வகையிலான வரி விதிப்பு மற்றும் வரி விலக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய வரி சீர்திருத்தம் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற் படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சரக்கு மற்றும் சேவை வரியால் பணவீக்கத்தில் தாக்கம் உருவாகாது என்றும் கூறியுள்ளது.

சர்வதேச அளவில் நிதிச் சேவை ஆலோசனை அமைப்பான ஹெச்எஸ்பிசி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு பல்வேறு வகையிலான வரி விகிதங்களை இறுதி செய்துள்ளது. முதற்கட்ட ஜிஎஸ்டி வரைவில் பலவற்றுக்கு ஒரே விகிதமும், சிலவற்றுக்கு மட்டும் வரி விலக்குகள் அளிக்கப் பட்டுள்ளன. இருந்தபோதிலும் பல பொருட்களுக்கு இன்னும் வரி விகிதம் முடிவு செய்யப்படவில்லை. இதனால் உள்ளீட்டு வரி இழப்புகள் முழுமைடையடையாமல் உள்ளன. இதனால் வரி விகிதங்களுக்கான தொடர்புகள், குறிப்பாக விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் முழுமையடையாமல் உள்ளன. இந்த வரிச் சீர்திருத்தத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு நடுத்தர கால அளவில் 0.40 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் 0.80 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வரிச் சட்டத்தை அமல்படுத்துவது அரசின் மிகப் பெரிய நடவடிக்கை. ஒரே நேரத் தில் வரி விலக்குகளும் அறிவித் துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் சேவைகளும் சில குழுவின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக வரி விதிப்பு முறை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்கிற வகைக்குள் இருக்கும். அதே நேரத்தில் சொகுசு கார்கள், காற்றடைக்கப்பட்ட பானங்கள், புகையிலை மற்றும் பான் என நான்கு பொருட்களையும் தனியாக வகைப்படுத்தியுள்ளது.

இந்த வரிச் சீர்திருத்தத்தினால் பணவீக்கம் அதிகரிக்காது என்றும் கூறியுள்ளது. உள்ளீட்டு வரியை மிகச் சிறப்பாக கையாள வழி வகுக்கும். பணவீக்கம் விகிதம் 0.10 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைய ஜிஎஸ்டி உதவும் என்றும் கூறியுள்ளது.

உற்பத்தி, விநியோக தொடர்பு கள், ஒட்டுமொத்த முதலீடு போன்றவை ஒழுங்குபடுத்தப் படுவதற்கு ஏற்ப நடுத்தர கால அளவில் குறைந்தபட்ச விலக்குகள் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply