ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கடந்த ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற வகையில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பிற்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி இருந்து வரும் நிலையில் இந்த வரிவிதிப்பிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆதரவு கொடுத்துள்ளார்
இந்திய சுற்றுப்பயணம் செய்து வரும் பில்கேட்ஸ் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்களை சந்தித்தார்.
இந்த நிலையில் இன்று டில்லியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியா, வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது. அதற்கான படிக்கல்லாக, ஜி.எஸ்.டி., அறிமுகமும், இதர வரி சீர்திருத்தங்களும் அமைந்துள்ளன. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வரி வருவாய் விகிதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அரசின் வருவாய் பெருகி, கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றுக்கு, அதிக நிதி ஒதுக்க முடியும்.