ஜிம்பாவேயில் ராணுவ ஆட்சி: இந்தியர்களின் நிலை என்ன?
ஜிம்பாவே நாட்டில் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா ஆதரவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் ராபர்ட் முகபே தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் பாராளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக ராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்ததுள்ளதால் எந்தவித போராட்டம், போர்க்களமின்றி அதாவது ‘ரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ அந்நாட்டில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் கூறுகையில், ஹராரேயில் அமைதி நிலவுகிறது. இந்தியர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் உள்ளனர். நான் தொடர்ந்து தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Zimbabwe – I am in constant touch with Indian Embassy in Zimbabwe. Our Ambassador has informed me that Indians there are safe and there is no cause for concern. @IndiainZimbabwe
— Sushma Swaraj (@SushmaSwaraj) November 15, 2017