ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகளையும் வென்ற நிலையில் நேற்று முதல் டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஜிம்பாவே அணி, 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஸ்கோர் விபரம்: இந்தியா 178/5 20 ஓவர்கள்
ரஹானே 33
முரளி விஜய் 34
உத்தப்பா 39
பாண்டே 19
ஜிம்பாவே 124/7 20 ஓவர்கள்
மஷக்கட்ஷா 28
சிபாபா 23
மட்ஜிவா 14
உட்சேயா 13
ஆட்டநாயகன் பட்டேல் (இந்தியா)