ஜியோவை ஏமாற்றினார்களா வாடிக்கையாளர்கள்? கட்டண அறிவிப்பின் திடுக்கிடும் பின்னணி
ஜியோ மொபைலில் இருந்து இனிமேல் ஜியோ மற்றும் லேண்ட்லைன் ஆகியவை தவிர மற்ற மொபைல்களுக்கு பேசும்போது நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மற்ற மொபைல் நிறுவனத்திற்கும் அழைப்புகள் இலவசம் என்பதால் தான் ஜியோ நெட்வொர்க்கிற்கு பலர் மாறினார்கள். ஆனால் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஜியோ வாடிக்கையாளர்கள் பலர் ஜியோ நிறுவனத்தை ஏமாற்றி வந்ததால் தான் இந்த அதிரடி அறிவிப்பு என கூறப்படுகிறது
ஏர்டெல் வோடபோன் ஐடியா உட்பட பல்வேறு மொபைல் போன் வைத்திருப்பவர்கள் ஜியோ போன் வைத்திருக்கும் வாடிக்கையாளரை அழைக்க வேண்டும் என்றால் வேண்டுமென்றே மிஸ்டுகால் கொடுப்பதாகவும் அந்த மிஸ்டு கால்களை அடுத்து ஜியோவில் உள்ளவர்கள் அவர்களை அழைப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மிஸ்டு கால்கள் வந்ததாகவும், அதே நம்பருக்கு மீண்டும் ஜியோ வில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளதாகவும் ஜியோ நிறுவனத்திற்கு தெரிய வந்துள்ளதால் இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
ஜியோ நிறுவனம் மற்ற மொபைல்களுக்கு அழைப்புகளுக்கு இலவசம் என அறிவித்தாலும் அந்த மொபைல் நிறுவனங்களுக்கு ஜியோ கட்டணம் செலுத்தி வருகிறது ஆனால் இந்த இலவச வசதியை சிலர் தவறாக பயன்படுத்தியதால்தான் தற்போது கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது