ஜியோ சிம் சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு. முகேஷ் அம்பானி

ஜியோ சிம் சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு. முகேஷ் அம்பானி

1ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் புதிய 4G சேவையான ஜியோவை அறிமுகப்படுத்தினார். மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது ஜியோ. அதற்கு முக்கியக் காரணம் டிசம்பர் 31-ம் தேதி வரை இலவச சேவை என்பதுதான். தற்போது அதனை அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. அதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானி,

“இந்தியாவுக்கு எனது வணக்கம்,

தற்போது எங்கள் ஜியோ குடும்பத்தில் 52 மில்லியன்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜியோ சேவையானது இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என, கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்தேன். நான் கூறியது சரிதான் என நீங்கள் இந்த 3 மாதத்தில் நிரூபித்துள்ளீர்கள். இந்தியாவில் மட்டுமல்ல. உலகளவில் கூட, ஜியோ மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த முதல் மூன்று மாத காலங்களில் ஜியோவானது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் நிறுவனங்களை விடவும் வேகமாக வளர்ந்துள்ளது.

இந்த 83 நாட்களில் ஜியோவானது 50 மில்லியன் வாடிக்கையாளர்களை 4G சேவையில் இணைத்துள்ளது. சராசரியாக ஒரு ஜியோ பயனாளர், மற்ற பிராட்பேன்ட் பயன்படுத்துபவரை விடவும் 25 மடங்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தியுள்ளார். கடந்த 3 மாதங்களில், ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றிருக்கிறது.

e-KYC சேவை மூலமாக சிம் கார்டுகளை வெறும் 5 நிமிடத்தில் ஆக்டிவேட் செய்ய எங்களால் முடிந்தது. இது சிறந்த அனுபவம். இன்று இந்தியாவில் 2 லட்சம் மையங்களை e-KYC சேவைக்காக நிறுவியுள்ளோம். இது சுமாராக இந்தியாவில் இருக்கும் மொத்த ஏ.டி.எம்.களின் எண்ணிக்கைக்கு சமமானது ஆகும். இதனை அடுத்த ஆண்டில் இரட்டிப்பாக்கி விடுவோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம் அதிகமான அன்பை செலுத்தினர். ஆனால் மற்ற டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஜியோவில் எப்போதுமே வாய்ஸ் காலிங் வசதியானது இலவசம்தான் என்பதை மீண்டும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தற்போது ஜியோ மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதிக்கு தயாராக இருக்கிறது. ஜியோ எப்போதுமே வாடிக்கையாளர்களின் அன்பை பெற்ற நிறுவனமாக இருக்கும். வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் புதிய ஜியோ பயனாளிகள் டேட்டா, வாய்ஸ், வீடியோ மற்றும் எல்லா ஜியோ அப்ளிகேஷன்களையும் இலவசமாக பயன்படுத்தலாம். இவை அனைத்தும் மார்ச் 31, 2017 வரை முற்றிலும் இலவசம். இதனை ‘ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என அழைப்போம்.

ஏற்கெனவே இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களும் இந்த வசதியை மார்ச் 31 வரை அனுபவிக்கலாம். இந்த சலுகையின் கீழ் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களின் சராசரி டேட்டாவை விடவும் 30 மடங்கு அதிகமான டேட்டாவை பெறுவார்கள்.

இந்த நாளில், நான் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவான, ரூபாய் நோட்டுகளை செல்லாமல் அறிவித்ததை பாராட்டுகிறேன். பிரதமரின் இந்த முடிவு டிஜிட்டல் பொருளாதரத்தை வளர்க்கும் வாய்ப்பினை தந்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் சாமானியர்கள் அதிகம் பலன் பெறுவார்கள் என்று நாம் நம்புகிறேன். இன்று ஜியோ மணி சேவை மூலமாக ஒவ்வொரு இந்தியரும் தனது பாக்கெட்டில் ஒரு ஏ.டி.எம்மை வைத்திருக்கிறார். இதனை இன்னும் எளிதாக்கும் வகையில் மைக்ரோ ஏ.டி.எம்.,கள் அமைக்கப்படும். சிறுவணிகர்கள் தங்களது பரிவர்த்தனைகளை டிஜிட்டலாக செய்யவும் ஜியோ வழிசெய்யும்.

இதன்மூலம் சிறு கடைகள், ரயில் டிக்கெட் வாங்குதல், பணம் பரிமாறுதல், உணவகம் என எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும். இந்த மூன்று மாதங்களில் ஜியோவும், இந்தியாவும் பல முக்கியமான மைல்கற்களை கடந்துள்ளது.
ஜியோவை முயற்சித்த, பயன்படுத்தும், விரும்பும், மேம்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள்! ஜியோ உதவியுடன் உங்களது டிஜிட்டல் வாழ்க்கை அழகாகும் என நம்புகிறோம்” எனப் பேசினார்.

Leave a Reply