ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:

ஆனால்…

கொரோனா வைரஸ் காரணமாக நான்கு கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அடுத்தகட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் இயங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, நாகை, கரூர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் ஜூன் 1 முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்த எட்டு மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்கள் இயங்கினாலும் காணொளி காட்சிகள் மூலமே விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply