ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் (31.07.2021) வரை நீட்டிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு

திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.

தட்டச்சு – சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.