ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? தீபா விளக்கம்

ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? தீபா விளக்கம்

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தில் வில்லியாக வரலட்சுமியின் கேரக்டருக்கு கோமளவல்லி என்ற பெயர் வைத்திருந்தது தெரிந்ததே. ஆனால் இந்த பெயர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்த பெயர் படத்தில் மியூட் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்றும், ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும் என்றும், அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார் என்றும், மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் தாயார் மட்டுமே சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்ததாகவும், அவருடைய இயற்பெயர் வேதவல்லி என்றும், ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதுகூட பெயரை மாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply