ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் காலில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன்: ஜீவஜோதி!
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை நேற்று சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவஜோதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக நீதிபதிகளுக்கு நன்றி சொல்வதுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து, விவரங்களை சொன்னேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை. ஆனால், அடுத்து முதல்வராக அவர் வந்ததும், அந்த வழக்கை தீவிர விசாரணை செய்ய உதவி செய்தார். ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருப்பேன் என்றார்.