ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் என்ன ஆனது: அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் என்ன ஆனது: அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டதாக அப்பல்லொ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வழக்கரிஞர் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது’ என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரணை செய்து வருகையில் ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் குறித்த வீடியோ பதிவுகளை சர்வரில் சேமிக்கவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply