ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் கெடு

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் கெடு

ஜெயலலிதா மரணம் தொடா்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவானது 3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து தமிழக அரசியலில் பல்வேறு குழப்ப நிலை நிலை நீடித்து வந்தது. மேலும் அவரது மரணம் தொடா்பாக பல்வேறு வதந்திகளும் எழுப்பப்பட்டன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எதிா்க்கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனா்.

அழுத்தம் அதிகாிக்கத் தொடங்கியதையடுத்து நேற்று முன்தினம் விசாரணை ஆணையத்தை அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு எந்த நேரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆணையம் தொடா்பாக அரசாணை வெளியிடாமல் இருந்தது போன்ற செயல்பாடுகளுக்கு பிற கட்சியினா் கண்டனம் தொிவித்தனா்.

இந்த நிலையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் தொடா்பான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணை ஆணையம் 3 மாதங்களில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப். 22, 2016 முதல் அவா் உயிாிழந்த டிச. 5, 2016 வரையிலான காலத்தில் நடைபெற்ற அனைத்தையும் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்திற்கு தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply