ஜெயலலிதா மரணத்துக்கும் கொடநாடு கொலைக்கும் தொடர்பு: கனிமொழி திடுக் தகவல்

ஜெயலலிதா மரணத்துக்கும் கொடநாடு கொலைக்கும் தொடர்பு: கனிமொழி திடுக் தகவல்

ஜெயலலிதா மரணத்துக்கும் கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக எம்பி கனிமொழி திடுக் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவார் என்று செய்திகள் கசிந்து வரும் நிலையில் நேற்று
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்பி பேசியதாவது:

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இது மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றார்.

 

Leave a Reply