ஜெயலலிதா வீடியோ வெளியீடு: தினகரன் மீது நடவடிக்கையா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார் என்பதை சற்றுமுன்னர் பார்த்தோம். இந்த நிலையில் ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது விதிமீறல் என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் பற்றிய வீடியோ தேர்தல் பிரசாரமாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை வெளியிட்ட தினகரன் மீதும் அவரது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
First video of former CM #Jayalalithaa undergoing treatment at @HospitalsApollo released by supporter of @TTVDhinakaran a day before #RKnagarByElection @NewIndianXpress pic.twitter.com/WNlaT4UgW4
— Samuel Merigala (@themerigala) December 20, 2017