ஜெ வீட்டில் சோதனை: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியின் கருத்து என்ன?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நேற்றிரவு வருமானவரித்துறையினர் சோதனை செய்த செய்தி வெளியானதும் தினகரன் ஆதரவாளர்கள் கொந்தளித்து காட்டமான அறிக்கைகளை மத்திய, மாநில அரசுக்கு எதிராக வெளியிட்டனர்.
ஆனால் இதுகுறித்து இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ‘ஜெ. இல்லத்தில் நடந்த வருமானவரிச்சோதனை தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளேன்; முதலமைச்சரை சந்தித்தபின் ஜெ.இல்லத்தில் நடந்த சோதனை குறித்து கருத்து தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்
இதேபோ ஈபிஎஸ் அணி ஆதரவு எம்பி மைத்ரேயன் தனது சமூகவலைத்தளத்தில் ‘காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை என்பது வேதனை அளிக்கிறது; என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்’ என்று கூறியுள்ளார்
அன்வர்ராஜா: போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சோதனையால் ஜெயலலிதாவுக்கு எந்த களங்கமும் இல்லை. வருமான வரித்துறை சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனவே முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை