டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் ஆப்ஸ்

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் ஆப்ஸ்

“என்னடா பண்ணுது உடம்புக்கு.. இத சாப்பிடு”, “காய்ச்சலா? ரசம் வெச்சு தரேன்”… அன்புடனும், அக்கறையுடனும் நமக்கு என்ன தேவையோ அதைச் சமைத்துக் கொடுப்பார்கள் பாட்டிகள். இப்போது எந்த உணவு, எதற்காக என்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அதற்கு உதவுகிறது 10 Best Foods for You என்ற ஆப். மின்னும் தோலுக்கு இந்த 10 உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த 10 உணவுகள் என ரக வாரியாக ரெகமெண்ட் செய்கிறது. எளிமையாக எடை குறைப்பது எப்படி – என்ற பி.டி.எஃப் புத்தகமும் இந்த ஆப்-உடன் இலவசமாகக் கிடைக்கிறது. கொஞ்சம் மேற்கத்திய வாசனை அடித்தாலும், இந்த ஆப் சொல்லும் ரெசிப்பிகளைச் செய்யத் தேவையான பொருள்கள் தெருமுனை சூப்பர் மார்க்கெட்டிலே கிடைக்கும். இந்தியர்கள் மத்தியிலும் ஹிட் அடித்திருக்கும் இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev136619.app203387
எடைக் குறைப்பு இனி ஈஸி!

டயட் மூலமாக உடல் எடையைக் குறைக்கலாம். இதற்காக உலகம் முழுவதுமே பல விதமான டயட் முறைகளைப் படித்திருப்போம். ஆனால், டயட் ஏதுமில்லாமல் உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறது இந்த ஆப். உங்களது உடல் எடை, உணவு முறை ஆகியவற்றைப் பதிவு செய்து உங்கள் உடல் எடையை எப்படிக் குறைக்கலாம் என டிப்ஸ் தருகிறது. உடலில் தண்ணீரின் அளவு எந்த அளவுக்கு உள்ளது. அதனை எப்படிச் சரியாகப் பராமரிக்க வேண்டும் போன்ற தகவல்களையும் தருகிறது. மேலும், உங்களுக்கான உணவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பரிந்துரை செய்கிறது. இது மொத்தமாக உங்கள் எடை எப்படி மாறியுள்ளது என்பதற்கான ட்ராக்கிங் வசதியும் இந்த ஆப்பில் உள்ளது.. 5 மில்லியன் பேர் பயன்படுத்தும் இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=ru.harmonicsoft.caloriecounter

Leave a Reply