டாயிஷ் வங்கி சிஇஓ குனித் சத்தா ராஜினாமா
ஜெர்மனியைச் சேர்ந்த டாயிஷ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி (ஆசியா பசிபிக்) குனித் சத்தா ராஜினாமா செய்தி ருக்கிறார். இந்த வங்கியில் 13 வருடங்களுக்கு மேலாக முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இவர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்திய பிரிவின் தலைவராகவும் இருந்தார். கடந்த 4 வருடமாக சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ஜூலை 17-ம் தேதி அனைத்து பொறுப்பு களிலிருந்தும் இவர் விடுவிக்கப் பட உள்ளார்.
பொதுத்துறை வங்கியான ஐபிடிஐ வங்கியில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு டாயிஷ் வங்கியின் இந்திய பிரிவு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் வங்கியின் பணியாளர்களின் எண்ணிக்கை 500லிருந்து 10,000-மாக உயர்ந்தி ருக்கிறது.
கடந்த வருடம் இந்த வங்கியின் இணை சிஇஓ (சர்வதேசம்) அன்ஷு ஜெயின் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து சத்தாவும் ராஜினாமா செய்திருப்பது குறிப் பிடத்தக்கது. இவருடைய அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக ஏதும் தெரியவில்லை.
இந்தியா, சீனா, ஆஸ்திரே லியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசியா பசிபிக் நாடுகளின் தலைவராக இவர் செயல்பட்டு வந்தார். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, ஐஐஎம் அகமதாபாத், அமெரிக்காவில் உள்ள வார்டன் ஆகிய கல்வி மையங்களில் கல்வி பயின்றவர். அமெரிக்காவில் உள்ள சிட்டி வங்கியிலும் பணி யாற்றி இருக்கிறார்.