டாஸ்மாக் கடைகளை மூடியதால் புதிய பிரச்சனை
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கவேண்டுமென பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள ஸ்டாக்குகள் திருடப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையில் யாருமே நடமாடாத இந்த நேரத்தில், இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அதில் இருக்கும் மதுபானங்கள் திருடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒருசில இடங்களில் திருட்டும் நடந்துள்ளது
இதனை அடுத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளை பத்திரமான குடோன்களில் வைத்து அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது