டாஸ்மாக் விவகாரம்: கனிமொழிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை
டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கொள்கை அளவில் அனைத்து கட்சிகளும் கூறி வந்தாலும் உண்மையில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற அக்கறை எந்த கட்சிக்கும் இல்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதுகுறித்து அமைதியாக இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கோவில்பட்டி டாஸ்மாக் கடையை மூட கோரி தூத்துகுடி எம்பி கனிமொழி தூத்துகுடி மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தார். இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து கூறியபோது, ‘தமிழகத்தில் லாப நோக்கம் பார்க்காமல் திமுகவினர் தங்களது மதுபான ஆலைகளை மூடவேண்டும்’ என்று கூறியுள்ளார்.