டிக் டாக்கில் பதிவு செய்யப்பட்ட 4 லட்சம் வீடியோக்கள் திடீர் நீக்கம்:

 என்ன காரணம்?

சமீபத்தில் இந்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்யாவிட்டால் அந்த செயலியை தடை செய்யபோவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில் அமெரிக்காவில் செயல்படும் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை நீக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கிட்டத்தட்ட 4 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார் இதனால் டிக் டாக் அமெரிக்க அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply