டிக் டாக் ஐ வாங்குகிறதா ட்விட்டர்?

 பரபரப்பு தகவல்

சீனாவின் வீடியோ செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் 15 நாள் கெடு கொடுத்து அமெரிக்காவில் தடை செய்ய திட்டமிட்டுள்ளது

15 நாட்களுக்குள் டிக் டாக் நிறுவனம் டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது

இதனை அடுத்து டிக்டாக் செயலியை வாங்குவதற்காக மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் முன் வந்துள்ளன என்பதும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது டிக் டாக் செயலியை டுவிட்டர் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதனால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply