டிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

டிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்ய விதித்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கி சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் டிக் டாக் செயலியில் ஆபாச மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply