டிக் டாக் வீடியோவில் கதறி அழுத ஆண்ட்டி: காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்
கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக் வீடியோ என்பது வைரலாக பரவி வருகிறது. ஒரு சிலர் இந்த டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உள்ளதால் ஒரு சில மாநிலங்களில் டிக்டாக்வீடியோ அவை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
இந்த நிலையில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் டிக்டாக் செயலியில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் இதுவரை தான் 350 வீடியோக்களை பதிவு செய்து இருப்பதாகவும் 30 ஆயிரம் லைக்ஸ்கள் இதுவரை வரை தனக்கு கிடைத்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரெண்ட்ஸ் தனக்கு இருப்பதாகவும் கூறினார்
மேலும் தற்போது அவருடைய போன் ஹேங் ஆகிவிட்டதாகவும் அதனால் தன்னால் டிக் டாக் வீடியோவை சில நாட்கள் பதிவு செய்ய முடியாது என்றும் உங்களை அனைவரும் மிஸ் செய்கிறேன் என்று கதறி அழுதார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் புதிய போன் வாங்கி உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்கின்றேன் என்றும் அதுவரை அனைவரும் பத்திரமாக இருங்கள் என்றும் அழுதுகொண்டே அவர் கூறினார்
இந்த வீடியோவை பார்த்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை என்று கமெண்டுக்கள் குவிந்து வருகின்றன டிக்டாக்வீடியோ ஒருவரை எந்த அளவிற்கு அடிமைப்படுத்தி உள்ளது என்பதற்கு இந்த வீடியோவை சான்றாக உள்ளது
https://twitter.com/rajakumaari/status/1197390471066083329?s=20