டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கோவில் கடைகளை காலி செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவில்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ‘தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு காலி செய்ய இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை அவகாசம் தரப்படுவதாகவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மாற்று இடம் குறித்து இந்து அறநிலைத்துறையிடம் 4 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு மாற்றி இடம் கோரி விண்ணப்பித்தால் அது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.