டிசிஎஸ் வேலை கிடைக்க வேண்டுமா? முதலில் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்…

டிசிஎஸ் வேலை கிடைக்க வேண்டுமா? முதலில் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்…

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமானால், பல சிக்கலான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம், இந்திய ஐடி துறையில் முன்னணியில் உள்ளது. அத்துடன், நாட்டின் முதல் 5 நிறுவனங்கள் பட்டியலில் தற்போது 2வது இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்திய மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல நாடுகளில் கிளைகள் உள்ளன.

ஐடி மற்றும் பிபிஓ சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுவது, பலருக்கும் லட்சியமாக உள்ளது. இதன்படி, அந்நிறுவனத்தின் வேலை கேட்பவர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகள் என்னவெறு, அந்நிறுவனம் விரிவான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவற்றில் சில கேள்விகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

முதலில், சாஃப்ட்வேர் டெஸ்டிங் ஆர்க்கிடெக் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சரிபார்ப்பு புள்ளியில் இருந்து, லைப்ரரி கோப்பை எவ்வாறு உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்குப் பதில் கூறவேண்டும்.

இதற்கடுத்தப்படியாக, பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் இந்த கேள்விக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, பாசிட்டிவ் எண்ணை 2ஆல் குறைக்கும்போது நேர்மறை எண் 15 மடங்கு சமமாக இருக்கும். அந்த எண் என்ன?..

தலை சுற்றுகிறதா, இன்னும் சில கேள்விகள் உள்ளன. தொடர்ந்து படியுங்கள்…

சிஸ்டம்ஸ் இன்டக்ரேட்டர் பதவிக்கு நீங்கள் விண்ணப்பித்தால், விஷுவல் பேசிக்கில் பெயர் பிராப்ரட்டி மற்றும் கேப்ஷன் பிராப்ரட்டி இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? என்ற கேள்விக்குப் பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.

இதேபோன்று, ஹார்ட்வேர் வடிவமைப்பு பொறியாளர் பணி வேண்டும் எனில், டிரான்சிஸ்டர் அளவு இரண்டு உள்ளீடு NAND கேட்டினை வரைக. பின்னர் அதன் அளவை விளக்குங்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.

மொத்தத்தில், முறையான பயிற்சி மற்றும் தியரிட்டிக்கல் அறிவு இருந்தால் மட்டுமே எந்த வேலையும் எளிதாகக் கிடைக்கும்…

Leave a Reply