டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேற்றம்: நிதி ஆயோக் சிஇஓ தகவல்

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேற்றம்: நிதி ஆயோக் சிஇஓ தகவல்

செலவு குறைந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் மேலும் கூறிய தாவது: முன்பெல்லாம் குறைந்த வர்த்தகம் அதிக பரிவர்த்தனை கட்டணம் என்ற நிலை இருந்தது. இப்போது அதிக அளவிலான பரிவர்த்தனை குறைந்த கட்டணம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தியப் பொருளாதாரமானது பண பரிவர்த்தனையை அடிப் படையாகக் கொண்டது. தற்போது 80 சதவீத பரிவர்த்தனைகள் ரொக்கப் பணம் மூலமாக நடைபெறுகிறது. இந்நிலை படிப்படியாக மாறி டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம் என்றார்.

ரொக்க பரிவர்த்தனைக்கான காலம் முடிந்துவிட்டது. இனி ஒவ்வொருவரது மொபைலும் நடமாடும் ஏடிஎம்- ஆக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா மட்டும்தான் நூறு கோடிக்கும் அதிகமான பயோ மெட்ரிக் உள்ள நாடாக திகழ்கிறது. அதேபோல இந்தியாவில்தான் நூறுகோடிக்கும் அதிகமானோ ரிடம் மொபைல் போன்கள் உள் ளன. இந்தியா மிகவும் அதிகமான தகவல்களைக் கொண்ட நாடாகும் என்று அவர் குறிப்பிட்டார்

Leave a Reply