டிடிவி தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவியா?
இவ்வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமையும் என்றும், அதற்கு முன் அதிமுக, அமமுக இணைப்பு நடைபெறும் என்றும் மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே கருத்து கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதுவையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில் வருகின்ற மக்களவைத் தோ்தலில் வருகின்ற மக்களவைத் தோ்தலில் பலமான கூட்டணியுடன் தோ்தலை சந்திக்க வேண்டும்.
தமிழகத்தின் நலன் கருதி அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும். அ.தி.மு.க., அமமுக, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டால் வலுவானதாக இருக்கும். டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து அவரை நேரில் சந்தித்து பேசவுள்ளேன். இந்த இணைப்பு சாத்தியமானால் தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது