டிடிவி தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன்
அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை என்றும், எங்களுக்குள் இருந்தது அண்ணன்-தம்பி பிரச்னைதான் என்றும், ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்படமாட்டார்கள் என்றும், முதல்வர் பழனிசாமி சொல்வதை கேட்டு செயல்படுவோம் என்றும் சற்றுமுன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தபின் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள் என்றும், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து டிடிவி தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியதை ஏற்க முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.