டிரக் டயர் மெக்கானிக்: இந்தியாவின் முதல் பெண் இவர் தான்
இந்தியாவின் முதல் பெண் என பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் குறித்து நாம் ஏற்கனவே அறிவோம். அந்த வகையில் டிரக் டயர் மெக்கானிக் தொழிலில் ஈடுபடும் முதல் பெண் என்ற பெருமையை 55 வயதில் சாந்தி தேவி என்ற பெண் பெற்றுள்ளார்
இவர் தனது தனது கணவருடன் இணைந்து டயர் மெக்கானிக் பணியை செய்து வருகிறார். ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும் நாளொன்றுக்கு சுமார் 14 மணி நேரம் இவர் வேலை வேலை செய்து வருகிறார்
இவருடைய கடுமையான உழைப்புக்கு ஈடு இணை இல்லை என சமூக வலைதளங்களில் இவரைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். இவரும் இவர் கணவரும் புதுடெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது