டிரம்ப்-சுந்தர் பிச்சை திடீர் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுக்கே தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்திற்கு அல்ல என்றும் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உறுதிபடத் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக சீனாவில் கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள் அந்நாட்டிற்கும், அந்நாட்டு ராணுவத்திற்குமே உதவுவதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுந்தர் பிச்சை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா ராணுவத்திற்கே தாம் முழுமையாக கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்திற்கு அல்ல என்று சுந்தர் பிச்சை உறுதிபடத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Just met with @SundarPichai, President of @Google, who is obviously doing quite well. He stated strongly that he is totally committed to the U.S. Military, not the Chinese Military….
— Donald J. Trump (@realDonaldTrump) March 27, 2019