டிரம்ப் முன் மேலாடை இன்றி வந்த இளம்பெண்கள்: அமெரிக்காவில் பரபரபு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றிருந்தபோது அவர் முன் மேலாடை இன்றி ஓடி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் முதல் உலகப்போர் முடிந்த 100ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரின் காரை திடீரென மறித்த ஒரு இளம்பெண் திடீரென மேலாடையை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அடுத்து அவருக்கு பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இருவரின் உடலிலும் ”வெல்கம் வார் கிரிமினல்ஸ் – போர் குற்றவாளிகளே வருக என்று எழுதப்பட்டு இருந்தது.
இருவரையும் உடனடியாக கைது செய்த பிரான்ஸ் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். ஃபீமென் அமைப்பை சேர்ந்த இவர்கள் அவ்வப்போது உலக தலைவர்கள் முன் மேலாடை இன்றி போராட்டம் செய்வது வழக்கமான ஒன்றே