டிவியை அடுத்து செட்டாப் பாக்ஸ் இலவசம்: திமுகவின் திட்டம்

டிவியை அடுத்து செட்டாப் பாக்ஸ் இலவசம்: திமுகவின் திட்டம்

தமிழக அரசியலில் அரசியல்வாதிகளின் இலவச அறிவிப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. அனைவருக்கும் டிவி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு ஆட்சியை திமுக பிடித்த நிலையில், அதிமுகவும் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என இலவசங்களை அள்ளி வழங்கியது. இதற்காக கோடிக்கணக்கில் அரசு செலவு செய்தது

இந்த நிலையில் தற்போது டிவி பார்க்க செட்டாப் பாக்ஸ் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் அதையும் இலவசமாக கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி அருகே கிராமம் ஒன்றில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”எங்கள் தாத்தா இலவச டிவி கொடுத்தது போல், எங்க அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார் என்று கூறியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் 21 தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் செட்டாப் பாக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply