டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: ஆயிரம் காலியிடங்கள்: சுதாரித்து கொள்ளுங்கள் தமிழர்களே!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: ஆயிரம் காலியிடங்கள்: சுதாரித்து கொள்ளுங்கள் தமிழர்களே!

தமிழகத்தில் காலியாகவிருக்கும் ரயில்வே வேலைகளை வெளிமாநிலத்தவர்கள் பறித்து கொண்டு சென்று வரும் நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதிலாவது தமிழர்கள் சுதாரித்து தங்கள் திறமையை நிரூபிக்க அறிவுறுத்தப்படுகிறது

சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி, விடைக்குறிப்புகளை வெளியிட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் புதிதாக மற்றொரு வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 2019-20 ஆண்டில் வருவாய்த்துறையில் ஏற்படக்கூடிய காலியிடங்களின் எண்ணிக்கை குறித்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் அந்த காலியிடங்களை நிரப்புவதற்காக வருவாய்த்துறை டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவிக்கவே இது போன்ற தகவல் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்தும் வருவாய்த்துறை காலியிடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வருவாய்த்துறையில் மட்டும் இளநிலை உதவியாளர் பணிக்கு 483 இடங்களும், தட்டச்சர் பணிக்கு 355 இடங்களும், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கு 30 இடங்களும் தற்சமயத்துக்கு காலியிடங்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 1,245 இடங்கள் காலியாக உள்ளது.

Leave a Reply