டீசல் விலை உயர்வு எதிரொலி: பாதியாக குறைக்கப்பட்ட பேருந்துகள்
டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் இயக்கப்படுவதை அரசு குறைக்க முடிவு செய்துள்ள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை 1000 வரை குறைத்து விட்ட நிலையில் தற்போது சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனால் பஸ்கள் செல்லும் இடைவெளி நேரம் அதிகரித்துள்ளதாகவும், 30 நிமிடத்துக்கு மேல்தான் பஸ்கள் வருவதாகவும்க்,. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதாகவும் கூறப்படூகிறது.