சட்டசபையில் டீசர்ட் அணிந்து வந்த எம்எல்ஏ ஒருவரை சபாநாயகர் வெளியேற்றிய சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ விமல் என்பவரை நேற்று சட்டசபையில் சபாநாயகர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்
அவர் டீசர்ட் அணிந்து வந்திருந்ததை பார்த்து கண்டனம் தெரிவித்த சபாநாயகர் இது ஒன்றும் விளையாட்டு மைதானம் அல்ல என்றும் உங்கள் இஷ்டத்திற்கு உடை அணிந்து வர முடியாது என்றும் சட்டசபைக்கு என்று ஒரு மரியாதை உண்டு என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார் இந்த சம்பவம் குஜராத் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது