டுவிட்டர் பயனாளிகளுக்கு டபுள் புரமோஷன்
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் விவிஐபிக்கள், செலிபிரிட்டிகள், அரசியல்வாதிகள் விரும்புவது டுவிட்டரைத்தான். டுவிட்டர் தளத்தின் பெருமையே அதன் 140 எழுத்துக்கள்தான். திருக்குறள் போல குறைவான வார்த்தைகளில் ஒரு விஷயத்தை புரிய வைப்பது என்பதே ஒரு கலை
இருப்பினும் ஒருசில கருத்துக்களை 140 வார்த்தைகளுக்குள் புரிய வைக்க முடியாது போனால் அடுத்த டுவிட்டரில் அதன் தொடர்ச்சியை பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்குள் ஒருசில டுவிட்டுக்கள் இடையில் வந்துவிடும் என்பதால் தொடர்ச்சி பாதிக்கப்படும்
இந்த நிலையில் டுவிட்டர் பயனாளிக்கு கிடைக்கும் டபுள் புரமோஷனாக தற்போது 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் டைப் செய்யலாம் என்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தற்போது சோதனை முன்னோட்டமாக இருப்பதாகவும் மிகவிரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.