டெங்கு நோய் வெகுவாக அதிகரித்துள்ளது

கடந்த வருடத்தை விட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்கிறார் பணிப்பாளர் .தென் மாகாணத்தில்  கடந்த வருடத்தைவிட இந்த வருட (ஏழு மாத காலத்தில்)  டெங்கு நோய் வெகுவாக அதிகரித்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் சந்தனசிறிதுங்க  தெரிவித்தார்.

கடந்த வருடம் தென் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களாக  1980பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இத்தொகை இந்தவருடம் ஜூலை மாதம் வரை 4648ஆக அதிகரித்துள்ளது.

காலி மாவட்டத்தில் 2696டெங்கு நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 1006டெங்கு நோயாளர்களும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் 946டெங்கு நோயாளர்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தில்  காலி மாவட்டத்தில்   744பேரும் மாத்தறை மாவட்டத்தில் 758பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்  478பேரும் டெங்கு நோயாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

கடந்த ஏழு மாதகாலத்திற்குள் டெங்கு நோயினால் காலி மாவட்டத்தில் இரண்டு மரணங்களும் மாத்தறை மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.