‘டெட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹாலிடிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, ‘டெட்’ தேர்வு ஏப்., 29, 30-ல் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்ததையடுத்து, இன்று(ஏப்.,11) முதல் டெட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அதனை கடந்த மார்ச் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.