டெல்லிக்கு பறந்த 2 கோடி கையெழுத்துக்கள்: ஜனாதிபதியிடம் அளிக்க திட்டம்

டெல்லிக்கு பறந்த 2 கோடி கையெழுத்துக்கள்: ஜனாதிபதியிடம் அளிக்க திட்டம்

திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும் சுமார் 2 கோடி மக்களிடம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஜனாதிபதியிடம் கையெழுத்துக்கள் ஒப்படைக்கும் நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவிருப்பதாகவும், இந்த கையெழுத்து பெற்ற படிவங்கள் வரும் 19ம் தேதி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் கொடுத்ட ஒரு சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மனு கொடுக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply