டெல்லியில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை
ஓபிஎஸ்-தினகரன் சந்தித்ததாக கூறப்படும் தகவல் தமிழக அரசியலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று அவர் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓபிஎஸ்-தினகரன் விவகாரம் குறித்து அவர் எம்பிக்களுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று எம்.பிக்களுடன் மீண்டும் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முதாலாவர் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அண்மையில் பேசிய முதலமைச்சரும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து மோடியிடம் ஆலோசிக்க உள்ளதாக கூறியிருந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுநருடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது பிரதமரை முதலமைச்சர் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று புதுடெல்லி தமிழகம் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போது. pic.twitter.com/kW3qb3Gpm5
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 7, 2018