டெல்லியில் ஜீரோவாகும் காங்கிரஸ்? மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் இன்று சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் டெல்லியில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சற்று முன் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் டெல்லியில் 50 முதல் 60 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 20 முதல் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறும் இந்த கருத்துக்கணிப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது