டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா: ஒரே நாளில் சுமார் 7000 பேர் பாதிப்பு

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது

இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதற்கு நேர்மாறாக டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது நேற்று ஒரே நாளில் 6842 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் நேற்று ஒரே நாளில் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என என்பதும் இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6703 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லியில் அடுத்த கட்ட அலை வீசுவதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Leave a Reply